வழங்கல் முறைDelivery
கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 8 ஆகஸ்ட் 2026 Last updated: 8 August 2026
இது முழுக்க முழுக்க டிஜிட்டல் நூல். எதுவும் தபாலில் அனுப்பப்படுவதில்லை — எனவே உலகின் எந்தப் பகுதியிலும் வழங்கல் கட்டணம் கிடையாது. This is a digital book. Nothing is posted or shipped, so there is no delivery charge anywhere in the world.
எப்படி வழங்கப்படுகிறதுHow it reaches you
உங்கள் நூல் ஒரு PDF கோப்பாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியில் அனுப்பப்படும்: Your book is sent as a PDF file, by whichever channel you choose:
- WhatsApp — ஆர்டரின் போது நீங்கள் தரும் எண்ணுக்கு. WhatsApp — to the number you give when ordering.
- மின்னஞ்சல் — ஆர்டரின் போது நீங்கள் தரும் முகவரிக்கு. Email — to the address you give when ordering.
கோப்பை உங்கள் ஃபோனிலோ கணினியிலோ படிக்கலாம், சேமிக்கலாம், அச்சிடலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கிக் கொள்ளலாம். You can read it on your phone or computer, save it, and print it. You may download it as many times as you like.
எவ்வளவு நேரம்How long it takes
- இலவச லக்னச் சரிபார்ப்பு — உடனடியாக, திரையிலேயே. The free lagna check — immediately, on screen.
- முழு ஜாதக நூல் (₹499) — பணம் செலுத்திய பின் 24 மணி நேரத்திற்குள். The full horoscope book (₹499) — within 24 hours of payment.
- வருடப் பலன் நூல் (₹199) — பணம் செலுத்திய பின் 24 மணி நேரத்திற்குள். The year-ahead book (₹199) — within 24 hours of payment.
பிறந்த நேரமோ இடமோ தெளிவில்லாத ஒரு சில ஜாதகங்களுக்கு, ஊகிப்பதற்குப் பதிலாக உங்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்துவோம். அப்போது சிறிது கால தாமதம் ஏற்படலாம் — அது தவறான நூலைத் தவிர்க்கவே. For the occasional chart where the birth time or place is ambiguous, we will ask you rather than guess. That can add a little time, and it exists to prevent a wrong book.
நூல் வரவில்லை என்றால்If it does not arrive
முதலில் உங்கள் மின்னஞ்சலின் spam / promotions கோப்புறையைப் பாருங்கள். அங்கும் இல்லையென்றால் WhatsApp-ல் ஒரு செய்தி அனுப்புங்கள் — உடனே மீண்டும் அனுப்புகிறோம். உறுதி செய்யப்பட்ட நேரத்திற்குள் நூல் வரவில்லை என்றால், முழுப் பணமும் திரும்பப் பெறத் தகுதி உண்டு. First check your email's spam or promotions folder. If it is not there, send us a WhatsApp message and we will resend it straight away. If the book does not arrive within the time we confirmed, you are entitled to a full refund.
விவரங்கள்: பணம் திரும்பப் பெறுதல் கொள்கை. See the refund policy for details.
வழங்கல் கட்டணம்Delivery charges
இல்லை. இந்தியாவிலோ வெளிநாட்டிலோ, விலையில் காட்டப்படும் தொகையைத் தவிர வேறு எந்தக் கட்டணமும் கிடையாது. None. In India or abroad, there is nothing to pay beyond the price shown.